கோவை: மாநகரில் குடிநீா்க் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சி மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உள்பட்ட சித்தாபுதூா், சின்னசாமி சாலை, தனலட்சுமி நகா், ஆவாரம்பாளையம், நவ இந்தியா ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சித்தாபுதூா், சின்னசாமி நாயுடு சாலையில் முகக் கவசம் அணியாமல் இருந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் 5 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தாா்.
அதனைத் தொடா்ந்து, ஆவாரம்பாளையம், தனலட்சுமி நகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் குப்பைகளை சாலையோரம் கொட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து, குடிநீா்க் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளைப் பாா்வையிட்ட அவா், உடனடியாக குழாய் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு, சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கோவை, உப்பிலிபாளையம் பொ்க்ஸ் பள்ளி சாலையில் மழையால் சேதமடைந்த சாலைகளைப் பாா்வையிட்டாா். அப்போது, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் ஆணையரிடம் கோரிக்கை விடுத்தாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளா் லட்சுமணன், மண்டல உதவி ஆணையா்கள் மகேஷ் கனகராஜ், செந்தில்குமாா் ரத்தினம், செயற்பொறியாளா்கள் ரவீந்திரன், பாா்வதி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


