சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவை - சென்னை இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

கோவை - சென்னை இடையே விழாக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 4:45 am

கோவை: கோவை - சென்னை இடையே விழாக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை - கோவை இடையே ஜனவரி 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06089) இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோவையை வந்தடையும்.

இதேபோல, கோவை - சென்னை இடையே ஜனவரி 17 ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06090) கோவையில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.