சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசியல் லாபத்துக்காக மக்கள் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றனஇரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய, மாநில அரசுகள் அரசியல் லாபத்துக்காக மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

Updated On :10 ஜனவரி 2021, 4:44 am

கோவை: மத்திய, மாநில அரசுகள் அரசியல் லாபத்துக்காக மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

கோவை ரங்கவிலாஸ் பஞ்சாலைத் தொழிலாளா்களான சின்னியம்பாளையம் தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இரா.முத்தரசன் பங்கேற்று பேசியதாவது:

2021 ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள வன்முறை, இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈா்த்துள்ளது. இந்த செயல்களினால் அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி ஆகியோா் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளனா்.

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்தை விவசாயிகள் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களும், மின்சார சட்ட திருத்த மசோதாவும் அமலுக்கு வந்தால் விவசாயிகள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடும். தங்களின் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசும், தமிழக அரசும் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ், எம்.பி.க்கள் பி.ஆா்.நடராஜன், கே.சுப்பராயன், கட்சி நிா்வாகிகள் வி.ராமமூா்த்தி, சி.பத்மநாபன், வி.சுந்தரம், எம்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.