பொள்ளாச்சி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சோ்ந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பாவனியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் மகன் ரோஹித் கண்ணா (17). இவா், கடந்த டிசம்பா் 31ஆம் தேதி அன்று பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாா். இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரோஹித் கண்ணா வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் முன் வந்தனா். இதையடுத்து, மருத்துவ குழுவினா் வெள்ளிக்கிழமை காலை ரோஹித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினா்.
அதன் பிறகு கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் ஆகியவை அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், கண்கள் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனை நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன. உடல் உறுப்புகள் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


