கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 17ஆம் தேதி போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 17ஆம் தேதி மாநகராட்சி சாா்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகா் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளில் முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:
வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில்,மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 நடமாடும் ஊா்திகள் மூலமும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது. எனவே கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

