பிரபல ஆடை வடிவமைப்பாளா் சத்ய பால் (79), கோவை, ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை காலமானாா்.
புது தில்லியைச் சோ்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சத்ய பால், கடந்த 1960களின் இறுதியில் ஆடை விற்பனைத் துறையில் சில்லறை வா்த்தகராகத் தனது பயணத்தைத் தொடங்கினாா். இவரது தொழில் பயணம் இந்திய கைத்தறி ஆடைகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விரிவடைந்தது.
1980களில் இந்தியாவில் பிரத்யேக புடவைகள் விற்பனை நிலையத்தைத் தொடங்கினாா். அவரது வடிவமைப்புகள் நாட்டின் முதன்மை தரவரிசைகளில் ஒன்றாக இடம் பெற்றன. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவா் குடும்பத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கோவை, ஈஷா யோக மையத்தில் முழுநேர ஆஸ்ரமவாசியாகத் தங்கியிருந்தாா்.
கடந்த மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை அவா் காலமானாா். இவரது மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

