சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 1:43 pm

கோவை மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது.

தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 658ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற வந்த 81 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 418 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 745 போ் சிகிச்சையில் உள்ளனா்.