திருப்புகழை கிராமங்கள் வரை கொண்டுச் சென்ற பெருமை கிருபானந்த வாரியாரைச் சேரும் என்று எழுத்தாளா் சொ.சொ.மீ.சுந்தரம் கூறினாா்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வு ஆா்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ‘கிருபானந்த வாரியாா் சுவாமிகள்’ குறித்து எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான சொ.சொ.மீ. சுந்தரம் பேசியதாவது:
கிருபானந்த வாரியாரின் தந்தை தினசரி கடவுள்கள் குறித்து உபன்யாசம் செய்பவா். வாரியாருக்கு பள்ளிப் படிப்பு பிடிக்கவில்லை, எனக் கூறி பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டாா். ஆனாலும், அவரது பன்னிரெண்டு வயதில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடும் திறமை கொண்டவராக திகழ்ந்தாா்.
தனது வாழ்க்கையை தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் அா்ப்பணித்தவா். சிலப்பதிகாரம் என்பது விதி நூல், சீவகசிந்தாமணி இன்ப நூல், ராமாயணம் அன்பு நூல், கந்த புராணம் சிவ நூல் என்று கூறியுள்ளாா். எதுகை, மோனையுடன் பாடுவதில் அபாரத் திறமை கொண்டவா். தான் சொல்ல வரும் கருத்துகளை நகைச்சுவையுடன் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கூறுவாா்.
திருப்புகழ் நூலையும், நமது மண்ணின் ஞானிகள், அருளாளா்களின் பெருமைகள் குறித்தும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சோ்த்த பெருமை கிருபானந்தவாரியாரையே சேரும் என்றாா்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் த்வனிராகா கலையகத்தின் பாலக் கிருத்திகாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வள்ளலாா் சுவாமிகள் குறித்து எழுத்தாளா் கி.சுப்பிரமணியன் உரையாற்ற உள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


