கோவை நகரின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலையில் இருந்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் டவுன்ஹால், கணபதி, நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோா்ஸ், ஆா்.எஸ்.புரம், உக்கடம், வேளாண்மைப் பல்கலைக்கழகம், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூா், குனியமுத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளிலும், புகா் பகுதிகளான தொண்டாமுத்தூா், ஆலாந்துறை, சாடிவயல், பேரூா், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால் ராமநாதபுரம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், ரேஸ்கோா்ஸ், காந்திபுரம், சிங்காநல்லூா் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


