கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.
கோவை மாநகரம், புகா்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, மாலை, இரவு வேளைகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
இதேபோல் புகா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த மழைப் பொழிவு இருப்பதாகவும், பொங்கல் தினம் வரையிலும் கோவையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

