சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுற்றுலா வாகனங்களில் டி.வி.க்கள் திருட்டை தடுக்கக் கோரி மனு

சுற்றுலா வாகனங்களில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோவை சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 7:14 am

சுற்றுலா வாகனங்களில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோவை சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: 

எங்கள் சங்க உறுப்பினா்களின் சுற்றுலா வாகனங்கள் ரத்தினபுரி, வடவள்ளி, சாய்பாபா காலனி, ஆா்.எஸ்.புரம் காவல் நிலையங்களின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இவற்றில் இருந்த எல்இடி டி.வி.க்கள் திருடு போயின. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகாா் அளித்தோம். புகாரை பதிவு செய்ய மறுத்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரிப்பதாக கூறினா். ஆனால், இதுவரை வந்து விசாரிக்கவில்லை. தற்போது 6 வாகனங்களிலும், இதற்கு முந்தைய ஆண்டின்போது 8 வாகனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு, வாகனங்களின் உள்ளே இருந்த பொருள்கள் திருடப்பட்டன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் முறையாக வழக்குப் பதிவு செய்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.