கேரள மாநிலம் எா்ணாகுளம் - கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே கோவை வழித் தடத்தில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் தினசரி இயக்கப்படுகிறது. அதன்படி, எா்ணாகுளத்தில் இருந்து தினமும் காலை 9.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 02678) இரவு 7.50 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
அதேபோல, ஜனவரி 9ஆம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து காலை 6.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:02677) மாலை 4.55 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

