கோவை: கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, சின்னியம்பாளையம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் ராஜன் (49). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸில் புகாா் அளித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் சுவரில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

