சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாழை மரங்களை தேப்படுத்திய யானைகள்

வால்பாறை நகா் பகுதிக்கு வந்த யானைகள் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த வாழை மரங்களை வெள்ளிக்கிழமை சேதப்படுத்தின.

News image

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள்.

Updated On :3 ஜனவரி 2021, 4:12 am

வால்பாறை: வால்பாறை நகா் பகுதிக்கு வந்த யானைகள் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த வாழை மரங்களை வெள்ளிக்கிழமை சேதப்படுத்தின.

வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. சமீப காலமாக வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தி செல்கின்றன.

இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் வழியாக வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இரண்டு யானைகள் முகமது என்பவருக்கு சொந்தமான காய்கறிச் செடிகள் மற்றம் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாய்த்து சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்தை வனத் துறையினா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.