நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து குமரி முத்து தாக்கல் செய்த மனுவை 11-ஆவது உதவி அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான இடத்தை வணிக வளாகத்துக்கு குத்தகைக்கு விட்டது குறித்தும், சங்கத்தின் உறுப்பினர் சந்தா தொகையை உயர்த்தியது குறித்தும் நடிகர் குமரிமுத்து குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் குமரிமுத்து வழக்கு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சங்கம், செயற்குழு கூடி உரிய முறையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் அவர் நீக்கப்பட்டார் எனவும், அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த 11-ஆவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்திராணி, நடிகர் குமரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


