சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நினைத்தாலே இனிக்கும்’ டிரைலரை வெளியிடுகிறார் கமல்ஹாசன்

அதுவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், சினிமாஸ்கோப்பில், டிடிஎஸ் ஒலியமைப்பில் மாற்றப்பட்டு இப்படம் வெளியாகவிருக்கிறது.

Updated On :11 செப்டம்பர் 2013, 6:34 pm

‘நினைத்தாலே இனிக்கும்’ டிரைலரை கமல்ஹாசன் வெளியிடுகிறார். 1979ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ .

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்து ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

அதுவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், சினிமாஸ்கோப்பில், டிடிஎஸ் ஒலியமைப்பில் மாற்றப்பட்டு இப்படம் வெளியாகவிருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிடுகிறார்.

இயக்குனர் கே.பாலசந்தர் , இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிச்சயம் ஒரு இனிப்பான செய்திதான்.