பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி மீண்டும் கிராமத்து வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் திரையுலகை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்தான் கார்த்தி. அப்படியொரு வெற்றியை தேடி தந்த படம்தான் பருத்திவீரன். இப்படம் கிரமாத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டடிருந்தது. அதன்பிறகு என்னவோ கார்த்தி நடித்த ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் அவ்வளவாக போகவில்லை.
சொல்லப்போனால் பருத்திவீரன் படத்தை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் நகரத்தின் பின்னணியில் அமைந்திருந்தன. கிராமத்து வேடத்தில் கிடைத்த வரவேற்பு போல் இந்த கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கிராமத்து வேடங்களை ஏற்கும்படி அவரது விசுவாசிகள் அட்வைஸ் சொன்னார்களாம்.
அந்த சமயத்தில்தான் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித், கார்த்தியிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் கார்த்தி. இதுபற்றி இயக்குனர் கூறும்போது, பருத்தி வீரன்போல் இப்படமும் வறட்சியான கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்கு இது வித்தியாசமான படமாக அமையும் என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


