சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

’மதகஜராஜா’ படத்தை வாங்கிய விஷால்

இதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் திரைக்கு வந்துவிட்டது. இதனால் காத்திருந்து வெறுத்துப் போன விஷால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 8:19 pm

‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம் ’மதகஜராஜா’. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுமாதிரி ‘மதகஜராஜா’வும் கலகலப்பான காமெடி படமாக அமைந்திருக்கிறதாம். மதகஜராஜா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ரிலீசாக இருந்தது.

ஆனால் நிதி நெருக்கடி காரணமாக படம் ரிலீஸாகாமல் தொடர்ந்து தள்ளிப் போனது. இதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் திரைக்கு வந்துவிட்டது. இதனால் காத்திருந்து வெறுத்துப் போன விஷால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதாவது படத்தை தானே வாங்கி விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் வெளியிட இருக்கிறார். இதையடுத்து ’மதகஜராஜா’ படம் அடுத்த மாதம் 6ம் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.