சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு 'யு' சான்றிதழ்

இந்நிலையில் தணிக்கைக் குழுவிற்கு சென்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:51 pm

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ’எதிர்நீச்சல்’ வெற்றிப் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ராம் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர்.

படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுகம் ஸ்ரீ திவ்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பரோட்டா சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில, பி.மதன் தயாரித்திருக்கிறார். படம் அடுத்த மாதம் 6—ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தணிக்கைக் குழுவிற்கு சென்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் இமான் இசையில் முதன்முறையாக பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.