சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தாத்தா, அப்பா, மகன் வேடத்தில் சந்தானம்

சந்தானம் ஒரு வேடத்தில் நடித்தாலே நகைச்சுவைக்கு சொல்லவே வேண்டும். அப்படியிருக்கையில் பட்டத்து யானை படத்துக்காக தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் வந்து நம்மை சிரிக்க வைக்க இருக்கிறாராம்.

Updated On :1 ஜூலை 2013, 8:24 pm

சந்தானத்தின் நகைச்சுவை நடிப்பு நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. சந்தானத்திற்கு நிகர் சந்தானமே என சொல்லுமளவிற்கு கலக்கி வருகிறார்.

படத்துக்கு படம் இவர் அடிக்கும் நக்கல் கலந்த லூட்டியால் திரையரங்கமே அதிர்கிறது. அந்த வகையில் சந்தானம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம்தான் பட்டத்து யானை. இதில் சந்தானம், விஷாலுடன் இணைந்து காமெடியில் பின்னி இருக்கிறாராம். அதோடு நில்லாமல் மேலும் ஒரு படி சென்று மூன்று வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.

சந்தானம் ஒரு வேடத்தில் நடித்தாலே நகைச்சுவைக்கு சொல்லவே வேண்டும். அப்படியிருக்கையில் பட்டத்து யானை படத்துக்காக தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் வந்து நம்மை சிரிக்க வைக்க இருக்கிறாராம். பூபதி பாண்டியன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.