தலைவா படத்துக்காக முதன் முதலில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார் அமலாபால். வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
தொடர்நது சிந்து சமவெளி படத்தில் நடித்தாலும் மைனா படம் இவருக்கு திருமுனையை ஏற்படுத்தியது. தற்போது நிமிர்ந்து நில், தலைவா போன்ற படங்களில் நடித்து வரும் அமலாபால் விரைவில் சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க இருக்கிறார். தலைவா அமலாபால் நடிக்கும் பத்தாவது படம். இதுவரை தான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசாத இவர் தலைவா படத்துக்காக முதன்முறையாக டப்பிங் பேசியுள்ளார்.
வேட்டை படத்தில் நடித்த போது அதில் டப்பிங் பேசும்படி லிங்குசாமி எவ்வளவோ சொல்லியும் அமலாபால் டப்பிங் பேசவில்லையாம். ஆனால் தலைவா படத்துக்காக நன்கு தமிழ் கற்று அதன்பிறகே டப்பிங் பேசியிருக்கிறார். காரணம் என்னவென்றால் படத்தில் அமலாபாலுக்கு போட்டியாக நடித்துள்ள நடிகை ராகினி சொந்த குரலில் டப்பிங் பேச இருப்பதாக யாரோ கிளப்பி விட்டிருக்கின்றனர்.
அதனால்தான் நானும் சொந்தக்குரலில் பேசுவேன் என அடம்பிடித்து டப்பிங் பேசியிருக்காங்க அமலாபால். இதன்மூலம் அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

