எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.
இந்தப் படத்தை இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் ராம் ஜெய் இயக்கி வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் பஸ் ஸ்டாப் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இப்படமும் முழுநீள நகைச்சுவை படம் தான்.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் அதன் விளம்பரப் பணிகளை ஆரம்பித்துவிட்டனர். அதன்படி படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 'எதிர்நீச்சல்' இயக்குனர் படம், ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக ஒரு படம், லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படம் என பிஸிதான்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

