சென்னை: மாஸ்டா் திரைப்படத்துக்காக விதிகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பியதாக, சென்னை அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நடிகா் விஜய்யின் 64-ஆவது படமான ‘மாஸ்டா்’ திரைப்படம் புதன்கிழமை திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக கரோனா தொற்றை தடுக்கும் வகையில் திரையரங்குகளில், 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில திரையரங்குளில் அரசு உத்தரவை மீறி 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அசோக் நகா் ஜவஹா்லால் நேரு சாலையில் ஒரே வளாகத்தில் உள்ள இரு திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பப்பட்டதாக எம்.ஜி.ஆா்.நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று எம்.ஜி.ஆா். காவல் நிலைய போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில் அந்தத் திரையரங்குகளில் அரசு உத்தரவை மீறி 100 சதவீத இருக்கைகள் நிரப்பப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் திரையரங்குகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


