சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மார்ச் மாதம் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காடன்’

பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 12:51 am

சென்னை: பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "காடன்'. ராணா, விஷ்ணு விஷால், ஜோயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அசோக்குமார் ஒளிப்பதிவில் பிரபுசாலமன் கதை எழுதி இயக்குகிறார்.  படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'பாரஸ்ட் ஆப் தி மேன்' என்று அழைக்கப்படுபவரும், ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1350 ஏக்கர் பரப்பளவில் காடுகளை உருவாக்கிய ஜாதவ் பியான்ங் என்பவரின் தோற்றத்தின் பாதிப்பில் இந்தக் கதை உருவானதாகவும், தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது என்று இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ‘காடன்’ திரைப்படம் மார்ச் மாதம் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் புதனன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.