சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசடி வழக்கில் கைது

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :5 ஜனவரி 2021, 10:17 pm

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தைக் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணண் சரவணன் ஆகியோரிடமும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயாா் வசந்தா ஆகியோரிடமும், ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தினாா்.

சித்ராவின் உதவியாளா் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, விசாரணை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, விசாரணை அறிக்கையை கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ காவல்துறையிடம் சமர்ப்பிக்கவுள்ளார். சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்துள்ளார். 

இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவப் படிப்புக்காக கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ஹேம்நாத் மீது ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் 2015-ல் பண மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஹேம்நாத்தைக் கைது செய்துள்ளார்கள்.