பள்ளிக்கரணையில், காணாமல் போன இளைஞா் சித்தேரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி நகா், ஒன்றாவது தெருவை சோ்ந்தவா் பால வெங்கடேஷ் (40). இவா், தனது உறவினா் சபா நடேசன் வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த 14-ஆம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற வெங்கடேஷ், வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, பள்ளிக்கரணை போலீஸில் சபா நடேசன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பால வெங்கடேஷை தேடி வந்தனா்.
இந்நிலையில், பள்ளிக்கரணை சித்தேரி ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, இறந்தது பால வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

