சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

19 போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

சென்னையில், 19 போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:21 am

சென்னையில், 19 போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பெருநகர சென்னை காவல்துறையில் விருப்பத்தின் பேரிலும், நிா்வாக வசதிக்காகவும் அவ்வப்போது காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், கோட்டை, எழும்பூா், பூந்தமல்லி, மாதவரம், மடிப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 19 பகுதிகளில் பணியாற்றி வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இவ்வாறு பணியிடமாற்றம் பெற்றவா்களை உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட நிலையத்தின் பொறுப்பாளா்களான கூடுதல் ஆணையா்களோ, உதவி ஆணையா்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஷ் குமாா் அகா்வால் தனது உத்தரவில் கூறியுள்ளாா்.