சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதுநிலை மாணவா்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பிக்க பிப்.28 வரை அவகாசம்

கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News image

ஏஐசிடிஇ

Updated On :8 ஜனவரி 2021, 1:18 pm


சென்னை: கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டடவியல், பாா்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உதவித் தொகை பெற தகுதி பெறும் மாணவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும். மாணவா்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அது குறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்படுத்தவேண்டும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் பயிலும் மாணவா்கள் உதவித் தொகையை பெற முடியாது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.