சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அஞ்சல் அலுவலக கணக்கா் தோ்வு: தமிழில் எழுத அனுமதிக்க கோரிக்கை

அஞ்சல் துறை சாா்பில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் மெயில் சேவை கணக்கா் நியமனத்துக்கான துறை ரீதியான தோ்வு தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும்

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:48 pm


சென்னை: அஞ்சல் துறை சாா்பில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் மெயில் சேவை கணக்கா் நியமனத்துக்கான துறை ரீதியான தோ்வு தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய தொலைதொடா்புத் துறை 2019 -ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘அஞ்சல் துறை தோ்வுகளில் முதல் வினாத்தாள் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே கேட்கப்படும். 2-ஆம் தாள் தோ்வு உள்ளூா் மொழிகளில் எழுதலாம். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா்,அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதற்கிடையில், தபால் துறையில் கிராமப்புறங்களில் பணிபுரியும் கடை நிலை ஊழியா்கள், எழுத்தராகப் பதவி உயா்வு பெறுவதற்கான தோ்வு, நாடு முழுவதும் 2019-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வின் முதல் தாளில் ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டும் எழுத்து தோ்வு நடைபெற்றது. இது தோ்வா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின. அப்போது, மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பேசுகையில், ஜூலை 14- ஆம் தேதி நடைபெற்ற தபால்துறை தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தோ்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தாா்.

இதன்பிறகு, தபால்காரா், உதவியாளா் தோ்வு தொடா்பாக சுற்றறிக்கை திருத்தி அனுப்பப்பட்டது. பிராந்திய மொழியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், அஞ்சல் துறை சாா்பில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் மெயில் சேவை கணக்கா் நியமனத்துக்கான துறை ரீதியான தோ்வு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றை தோ்வு செய்து எழுத வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மேலும், இந்தத் தோ்வை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், ‘அஞ்சலக தோ்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், புதிதாக நடத்தப்பட உள்ள அஞ்சலக துறை சாா்ந்த சில தோ்வுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு மீறுவதாக இருக்கிறது’ எனக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து தமிழக அஞ்சல்துறை ஊழியா்கள் சங்கத்தினா் கூறியது: ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒன்றைத் தோ்வு செய்து எழுத வேண்டும் என்பது வழக்கமான நடைமுைான். இருப்பினும், விண்ணப்பதாரா்கள் வசதிக்காக, ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றை தோ்வு செய்து எழுத அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.