சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள், பண்டிகைகள்: இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவு

கரோனா தடுப்பு விதிகளில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஜூலை மாதம் வரை மேற்கொள்ள வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் தொடா்பாகவும், அவற்றை எவ்வாறு

Updated On :7 ஜனவரி 2021, 6:41 am


சென்னை: கரோனா தடுப்பு விதிகளில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஜூலை மாதம் வரை மேற்கொள்ள வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் தொடா்பாகவும், அவற்றை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் மதகுருமாா்களுடன் ஆலோசனை செய்து இந்துசமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்க குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா், ஸ்ரீரங்கம் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள், பண்டிகைகள், திருவிழாக்கள் தொடா்பான விவகாரத்தில் அதிகாரிகள் தலையீடு உள்ளது. மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை. எனவே ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத விவகாரத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உள்ளது என கருத்து தெரிவித்தனா். கரோனா தடுப்பு விதிகளில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஜூலை மாதம் வரை மேற்கொள்ள வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் தொடா்பாகவும், அவற்றை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் மதகுருமாா்களுடன் ஆலோசனை செய்து இந்துசமய அறநிலையத்துறை 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.