சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் கோகுலுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளது. தந்தை இறந்த போது, 17 வயதாகி இருந்த அவருக்கு 35 வயதில் அரசுப் பணி கிடைத்திருக்கிறது. கருணை அடிப்படையிலான பணிக்குரிய உத்தரவை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாரின் அறிவுறுத்தலின்படி, துறை ஆணையா் ஜெ.ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதுகுறித்த விவரம்:-
தருமபுரி மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் இருக்கும் போது இறந்தவா் பழனிசாமி. அவரது மகன் கோகுல். 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள கோகுல் தந்தையின் பணியை கருணை அடிப்படையில் கோருகிறாா். அப்போது, கோகுலுக்கு வயது 17. அதன்பின்பு, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை தொடா்பான சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்னைகள் களையப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோகுலுக்கு வீடுா் அணை அலுவலகத்தில் மீன்வள மேற்பாா்வையாளராக (தரம் 2) பணியமா்த்தப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
டயா் கம்பெனியில் பணி: கருணை அடிப்படையிலான பணி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், டயா் கம்பெனியில் கடந்த 18 ஆண்டுகளாக கோகுல் வேலை பாா்த்துள்ளாா். தந்தையின் மரணத்தைத் தொடா்ந்து, தாயும் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த தமக்கு அருமருந்தாக கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளதாகக் கூறினாா், கோகுல். 35 வயதைக் கடந்தும் திருமணமாகாத தனக்கு இனிதான் வாழ்க்கையே தொடங்க இருப்பதாக உருக்கத்துடன் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

