சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விருப்ப ஓய்வு ஏற்பு

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தின் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

News image

சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு

Updated On :7 ஜனவரி 2021, 6:53 am


சென்னை: தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தின் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற இருப்பதாக கடந்த அக்டோபரில் கடிதம் அளித்தாா் உ.சகாயம். அதிகாரிகள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவா்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்தக் காலத்துக்குள் அவா்கள் விருப்ப ஓய்வு பெற அளித்த கடிதத்தைத் திரும்பப் பெறலாம்.

ஆனால், கடந்த அக்டோபரில் இருந்து மூன்று மாதங்கள் வரையில் கடிதத்தை சகாயம் திரும்பப் பெறவில்லை. இதையடுத்து, அவரின் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, அறிவியல் நகரத்தின் துணைத் தலைவா் பொறுப்பானது, ஆவணங்கள் காப்பகத்தின் ஆணையா் ராஜேஷ் லக்கானியிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.