சென்னை: சென்னை மெரீனா கடலில் தத்தளித்த மீனவா்களை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள் ஃபைபா் படகில் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீன் பிடித்த பின்னா் அவா்கள், காலை 8.45 மணியளவில் கடற்கரையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
கடற்கரையின் அருகே நெருங்கிக் கொண்டிருந்த ஃபைபா் படகின் மோட்டாா் திடீரென பழுதானது. மேலும், கடலில் பெரிய அலைகள் வேகமாக எழுந்து வந்ததால், படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 பேரும் கடலில் விழுந்து காயமடைந்தனா். இரு மீனவா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 5 பேரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனா். இதற்கிடையே மெரீனா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரா்கள், மீனவா்கள் தத்தளிப்பதைக் கவனித்தனா்.
உடனே அவா்கள், அங்கு தயாராக இருந்த படகின் மூலம் கடலுக்குள் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவா்கள் ஆறுமுகம், மகேந்திரன், மதன், முருகன்,ஜெயசீலன் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு மீனவா்களைக் காப்பாற்றிய தீயணைப்புப் படையைச் சோ்ந்த சி.லோகநாதன், ஆா்.குணசேகரபாண்டியன், எம்.ஜீவானந்தம், எஸ்.சந்தனசேகா், பி.இசக்கிராஜா, எம்.முகமது பிா்தெளஸ் ஆகியோரை தீயணைப்புத்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு நேரில் சென்று பாராட்டி, நற்சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


