சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகர்கோவில்- மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதால் நாகர்கோவில் - மங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2013, 9:17 am

ஓணம் பண்டிகையை முன்னிட்டு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதால் நாகர்கோவில் - மங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 06306: நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

ரயில் எண் 06305: மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து செப்டம்பர் 14-ஆம் தேதி பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கும்.