கடனை திருப்பிச் செலுத்தாததால், மாதவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சனிக்கிழமை கந்து வட்டி கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மாதவரம், அகலி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் (48). எலெக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான வீரப்பனுக்கு மனைவி உமாசெல்வி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர்.
சைதாப்பேட்டை, குமரன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சண்முகம் ஆகியோரிடம் ரூ.5 லட்சம் கந்து வட்டிக்கு வீரப்பன் வாங்கியுள்ளார். கடனாக பெற்ற தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வட்டி மட்டுமே கட்டியுள்ளார். ஆனால் அசல் தொகையை முழுதாகத் திருப்பித் தரவில்லை என்று மாரிமுத்து, சண்முகம் ஆகியோர் வீரப்பனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மிரட்டியுள்ளனர்.
மேலும் அவரது குடும்பத்தாரைக் கொன்று விடுவதாகக் கூறி மிரட்டினார்களாம். இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வீரப்பன் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை (ஆக.31) இரவு 11 மணிக்கு கிண்டியில் உள்ள தனது நிறுவனத்தில் பணிகளை முடித்து விட்டு வீரப்பன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குமரன் நகர் பகுதியில் உள்ள சுசிலா தெரு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் வழி மறித்துள்ளனர்.
கடனை திருப்பி செலுத்தாதது குறித்தும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது பற்றியும் வீரப்பனை அவர்கள் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கிடையேயான தகராறு முற்றவே, மர்ம நபர்கள் இரும்புக் கம்பியைக் கொண்டு வீரப்பனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.
இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடி வருகின்றனர்.
கொலை சம்பவம் குறித்து வீரப்பனின் குடும்பத்தார் தெரிவித்த தகவல்:-
கடனாக பெற்ற ரூ.5 லட்சத்துக்கு இதுவரை ரூ.50 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்து விட்டோம். இதற்கான ரசீதுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இதைத் தவிர எங்களுடைய சொத்துப் பத்திரத்தை மாரிமுத்து வாங்கிக் கொண்ட பிறகே எங்களுக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தொடர்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். வீரப்பன் கொலை செய்யப்பட்டதற்கு மாரிமுத்துவும், அவரது கந்துவட்டி கும்பலுமே காரணம் என்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

