சென்னையில் கண்தானத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே தொடங்கிய பேரணியை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து "தானத்தில் சிறந்தது கண்தானம்',"விழிகளைக்கொடுத்து விடியலைத் தருவோம்'உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர்.
பேரணியின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் கண்தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன்ராஜன், திரைப்பட நடிகர்கள் எஸ்.வி.சேகர், சிவா ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் ஏ.பி.கன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜன் கண் வங்கி மற்றும் தி.நகர் ரோட்டரி சங்கம் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

