சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள்.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.
சென்னை அரசு மருத்துவமனையில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையின் அனைத்து வார்டுகள், படிக்கட்டுகள், தாழ்வாரங்கள், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அசுத்தங்களை சுத்தப்படுத்தினர். மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்திருந்த தேவையற்ற செடிகள், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.
சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை இது குறித்து கூறுகையில்,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 1 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக சுகாதாரக் கேடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே இது போன்ற சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுவது என்பது மருத்துவமனை சுகாதாரத்திற்கும்,நோயாளிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


