முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனிடம் மாநில தலைமைத் தகவல் ஆணையர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதம் மீதான விசாரணையை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணைய மைய அலுவலகத்தில் இருந்து தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை மேற்கொண்
டார்.
இதையொட்டி வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பேரறிவாளன், சிறைக்குள் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் வேலூர் மத்தியச் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இருந்தார்.
சுமார் 25 நிமிடம் இந்த விடியோ கான்ஃபரன்சிங் விசாரணை நடந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

