சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாஞ்சி நாதன், கொடிகாத்த குமரனுக்கு சிலை அமைக்க கோரிக்கை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் வீர வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காமராஜர் தேசிய காங்கிரஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 8:14 am

சுதந்திரப் போராட்ட தியாகிகள் வீர வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காமராஜர் தேசிய காங்கிரஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.7000-த்திலிருந்து ரூ.9000- வரை உயர்த்தி கொடுத்தது மகிழ்ச்சியான செய்தி. தியாகிகள் சார்பில் காமராஜர் தேசிய காங்கிரஸ் பாராட்டும் நன்றியையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

சுதந்திர போராட்டத்தில் வெள்ளையரை கதிகலங்கச் செய்த வீரவாஞ்சிநாதன் தேசிய கொடிக்கு பெருமை சேர்த்த கொடிகாத்த குமரன் ஆகிய இருவருக்கும் சென்னை தலைநகரத்தில் உருவச் சிலை நிறுவ தமிழக அரசு முன்வரவேண்டும்.

ராயப்பேட்டை ஐரோடு என்று உள்ளதை கொடிகாத்த குமரன் சாலை என்றும் மயிலாப்பூரில் கச்சேரி ரோடு என்பதை வீரவாஞ்சிநாதன் சாலை என்றும் பெயரிட்டு அவர்கள் தியாகத்தை நாட்டு மக்கள் மத்தியில் நிலைநிறுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று காமராஜர் தேசிய காங்கிர தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.