சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மார்க்சிஸ்ட் குழுவினர் 25-ல் சீனா பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அசோக் தவாலே தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி சீனப் பயணம் மேற்கொள்கின்றனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 7:47 am

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அசோக் தவாலே தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி சீனப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் இடம்பெற்றுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில் அங்கு செல்லும் இக்குழுவினர், வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை அந்நாட்டின் முக்கிய நகரங்களைப் பார்வையிடுகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.