சோழிங்கநல்லூர் அருகே பெண்ணைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
சோழிங்கநல்லூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் முனியம்மாள் (62). இவரது கணவர் திருமால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு முனியம்மாளைப் பார்க்க அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவர் வந்தார். அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் முனியம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்ளிட்ட நகைகள் திருடு போயிருந்ததாகத் தெரிகிறது. நகைக்காக அவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

