சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கண்டோன்மென்ட் தேர்தல்: திமுக நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு கருணாநிதி கண்டனம்

வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் திமுகவினர் தாக்கப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 8:54 am

வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் திமுகவினர் தாக்கப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- ராணுவக் கட்டுப்பாட்டில் வெலிங்டன் கண்டோன்மெட் போர்டு துணைத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

உறுப்பினர்கள் தேர்தலில் திமுகவுக்கு 4 உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 3 உறுப்பினர்களும் இருப்பதால் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருக்கும்போது அதிமுக தோல்வி என்ற செய்தி வரக்கூடாது என்பதற்காக தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக உறுப்பினர்கள் 4 பேரையும், அவர்களுக்குத் துணையாகச் சென்ற நீலகிரி மாவட்டச் செயலாளர் கா.ராமச்ந்திரன், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபராக், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் முன்னிலையில் கடுமையாக அதிமுகவினர் தாக்கியுள்ளனர்.

இது சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதேசமயம் திமுக வேட்பாளர் வினோத்குமார் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை ராணுவ அதிகாரி வழங்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கொடநாட்டில் முதல்வர் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுள்ளன என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சிதைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம் என கருணாநிதி கூறியுள்ளார்.