சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் நவீன நடமாடும் காவல் நிலைய சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் நடமாடும் காவல் நிலையம் இயக்கப்பட்டு வந்தது. நடமாடும் காவல் நிலையம் செயல்பட்ட வாகனம் பழுதடைந்து காணப்பட்டதால், பல நேரங்களில் அதனை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நடமாடும் காவல் நிலையத்தை புதுப்பிப்பதற்காக பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நிதி ஒதுங்கினார். இதையடுத்து அந்த காவல் நிலையம் பல அதிநவீன வசதிகளோடு புதுப்பிக்கப்பட்டது. அதில் இணையத்தள வசதியுடன்கூடிய கணினி வசதி, விழிப்புணர்வு திரைப்படங்களை திரையிடும் வகையில் நவீன ப்ராக்ஜ்டர் மற்றும் திரை வசதி ஆகியவை அமைக்கப்பட்டன.
இந்த வாகனத்தின் சேவை தொடக்க விழா அண்ணாநகர் டவர் பூங்கா அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையர் கே.சண்முகவேல் தலைமை வகித்து சேவையைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உதவி ஆணையர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நடமாடும் காவல் நிலையத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், விசாரிக்க முடியாத புகார்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் இருக்கும் திரைப்பட ப்ராக்ஜடர் மூலம் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்படங்களும், சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும் திரையிடப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

