சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நகைக்காக மூதாட்டி கடத்தல்: பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

பாலவாக்கத்தில் நகைக்காக மூதாட்டி கடத்தப்பட்டது தொடர்பாக பணிப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 8:56 am

பாலவாக்கத்தில் நகைக்காக மூதாட்டி கடத்தப்பட்டது தொடர்பாக பணிப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலவாக்கம் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ஜஹாரா (60). இவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் ஜஹாராவை தாக்கி காரில் கடத்தியது. அந்த கும்பல் ஜஹாரா அணிந்திருந்த நகைகளைப் பறித்துவிட்டு, கோவிந்தன் நகரில் அவரை விட்டுவிட்டு தப்பியோடியது.

இது குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த வீட்டில் வேலை செய்யும் அலிஸ் மேரி (35), அவருடைய உறவினர்கள் பாலவாக்கத்தைச் சேர்ந்த பி.பினு (25), குடவாசல் அருகேஅரவன்குடியைச் சேர்ந்த அமுல்ராஜ் (26), மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 4 பேரும் ஜஹாராவை கடத்தி நகையைப் பறித்தது தெரிந்தது.

4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, கார் பறிமுதல் செய்

யப்பட்டன.