சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கபெருமாள் கோயில் நேரு நகரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (33). இவர் ஆலந்தூரில் வசிக்கும் தனது உறவினர் குட்டி ராமதாஸ் என்பவருக்கு ரூ. 5 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். ராமதாஸ், அந்தப் பணத்தை திருப்பித் தரவில்லையாம்.
இது குறித்து கோட்டீஸ்வரி, காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த கோடீஸ்வரி வியாழக்கிழமை காலை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வாயிலுக்கு வந்தார்.
அங்கு வாயிலில் போலீஸாரின் கெடுபிடி அதிகம் இருப்பதை பார்த்த கோடீஸ்வரி, ஆணையர் அலுவலகத்திலிருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றார்.
பின்னர் தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றினார். இதைப் பார்த்த பொதுமக்களும், அங்கு நின்றுக் கொண்டிருந்த போலீஸாரும் கோடீஸ்வரியை மீட்டு, எழும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

