இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ஜூலை 22-ல் அரசாணைகளை வெளியிட்டது. இதில் ஊதிய விகிதத்தில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யப்படாதது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று கட்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 14-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும், மூன்றாவது கட்டமாக உயர்நிலை, மேல்நிலைக் கல்வி ஆசிரியர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுப் போராட்டமும் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

