கெருகம்பாக்கத்தில் கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
மாங்காடு அருகில் உள்ள கெருகம்பாக்கம் டாக்டர் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (34).
இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற ஹரிகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
அப்போது கெருகம்பாக்கம் மயானத்தில் உள்ள தகன மேடையில் கற்களால் மூடப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார் இறந்து கிடந்தது ஹரிகிருஷ்ணன் என்பதை உறுதிப்படுத்தினர். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
விசாரணையில், காணாமல் போன அன்று ஹரிகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் மது குடிக்கச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷிடம் போலீஸார் விசாரித்தனர்.
ஹரிகிருஷ்ணன் மது போதையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதன் காரணமாக கற்களால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் ராஜேஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

