இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.unom.ac.in, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு: இளநிலை பட்டப் படிப்புகளில் 2010-11 கல்வியாண்டு முதல் சேர்ந்த மாணவர்கள்,தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ. 750 வீதம் வரைவோலை எடுத்து வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மறு கூட்டல்: மாணவர்கள் தேர்வுத் தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். வரைவோலையை பதிவாளர், சென்னைப் பலைகலைக்கழகம் என்ற பெயருக்கு எடுக்க
வேண்டும்.
உடனடி தேர்வு: இளநிலை பட்டப் படிப்பில் ஐந்து பருவத் தேர்வுகள் வரை எந்தவொரு பாடத்திலும் தோல்வியடையாமல், ஆறாவது பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
இந்த உடனடி தேர்வுக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி பெண்கள் கல்லூரியில் ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த உடனடி தேர்வு நடத்தப்படும். இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டை சென்னைப் பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து வரும் 25-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் உடனடி தேர்வுக்கான விண்ணப்பங்களை www.unom.ac.in இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

