தமிழகத்தில் சித்த மருத்துவம்-ஆயுர்வேத மருத்துவம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் 285 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோயிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியாகும். ஆகஸ்ட் இரண்டாவது வாரம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

