சென்னை புது வண்ணாரப்பேட்டை அரசு கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சாக்கு பைகள் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
புது வண்ணாரப்பேட்டையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் பழைய சாக்குப் பைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து புதன்கிழமை காலை புகை வந்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வண்டி வருவதற்குள், அந்த கிட்டங்கியில் உள்ள சாக்கு பைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 5 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சாக்குப் பைகள் எரிந்து நாசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

